ஒரே நேரத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டே தற்கொலை செய்த காதலர்கள்!!

622

கைத்தொலைபேசியில் பேசியபடி அவரவர் வீட்டிலிருந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அச்சமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி, இவர் தனது வீட்டில் விஷம் அருந்தி, மயங்கிக் கிடந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரும் தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரும் ஒரே வகையான விஷத்தை அருந்தியதால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நடத்திய விசாரணையில் கார்த்திக்கும், பாரதியும் காதலர்கள் என்பதும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாரதிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருந்தது.

இதையடுத்து காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர், அதன்படி கைபேசியில் பேசிக் கொண்டே அவரவர் வீட்டில் இருந்தவாறு விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.