4 கோடி பெறுமதியான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி!!

587

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை ஒருவர் 4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை T.A. பொன்மணி தேவி. 85 வயதாகும் பொன்மணி 4 கோடி மதிப்புமிக்க, தனது 93 சென்ட் நிலத்தை சித்தோடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அந்த பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், அவரது நிலத்தின் ஆவணங்களை அளித்தார்.

சித்தோடு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியானது 1948ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாள் தொடங்கப்பட்டு கடந்த வருடம் தான் உயர்நிலைப் பள்ளி எனும் அந்தஸ்த்தை பெற்றது.

இங்கு 6 முதல் 11ம் வகுப்பு வரை 486 மாணவர்கள் பயின்றுவருகின்றனர், 37 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் A.G பரமேஸ்வரி ஊடகத்தினரிடம் பேசும்போது “ இந்த பள்ளியில் 16 வகுப்பறைகள் போதிய வசதி இல்லாமல் உள்ளன, மேலும் 20 புதிய வகுப்பறைக்கள் தேவைப்படுகின்றன, இதுபற்றி முன்னாள் தலைமை ஆசிரியர் தேவியிடம் தெரிவித்தபொது அவர் வகுப்பறையை மேம்படுத்த உடனடியாக 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்.
பின்னர் தனது நிலத்தையும் பள்ளிக்கு அளித்து மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளார்” என்றார்.

முன்னாள் தலைமை ஆசிரியை T.A. பொன்மணி தேவி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவரது கணவர் மற்றும் மகன் மறைந்துவிட்டதால் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் உள்ளார்.

ஏற்கனவே இதே பள்ளிக்கு விடுதி கட்டுவதற்காக 2500 சதுர அடி நிலத்தை பொன்மணி தேவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.