இந்தியாவில் வீதியை கடக்க முயன்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குஜராத்தின் கோத்ரா நகரில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் பிரதான சாலை ஒன்றை கடந்த 20-ஆம் திகதியன்று கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது அந்த வழியாக சென்ற லொறி ஒன்று மோதியது.
மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அந்த நபர் எந்த காயமுமின்றி உயிர் பிழைத்தது அனைவருக்கும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதிலும் வைரலாகி வருகிறது.
#WATCH Man makes a narrow escape after being hit by a dumper on Halol-Pavagadh highway in #Gujarat‘s Godhra (20.02.18) pic.twitter.com/fmnqd0IYnJ
— ANI (@ANI) February 22, 2018






