கட்சி அறிவிப்பு மாநாட்டில் நடிகர் செய்த செயல் : எச்சரித்த கமல்ஹாசன்!!

673

மதுரையில் நடைபெற்ற கட்சி அறிவிப்பு மாநாட்டில் காலில் விழுந்த நடிகர் பரணியை கமல் இனிமேல் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடையில் நடந்த கட்சி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு இவரை காண்பதற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான பரணி இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். கமல் மாநாட்டின் மேடைக்கு வருவதற்கு முன்பே மேடையில் இருந்த ஒருவர் கமல் வந்த பின்பு அவர் காலில் விழக்கூடாது, அது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் பரணி கமலஹாசனை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முற்பட்டார்.  இதைக் கண்ட கமலின் ஆதரவாளர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி, கமல்ஹாசன் காலில் யாரும் விழ வேண்டாம் என்றும், தன்னுடைய ஆதரவாளர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து மக்களின் நன்மைக்காக செயல்படுவதையே அவர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின் பரணியை சந்தித்த கமல் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.