என் மகனை அடித்துக் கொன்றது ஏன் : கதறும் ஆதிவாசியின் தாய்!!

1145

கேரளாவில் ஆதிவாசி நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அட்டப்பாடி என்னுமிடத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பலால் மது என்ற ஆதிவாசி நபரை அடித்துத் துன்புறுத்தியது. கடைகளில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அடித்து கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின, இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், இது குறித்த விசாரணைக்கு DGPயை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆதிவாசியின் தாய் மல்லி, 9 மாதங்களாக எனது மகன் காட்டில் வசித்து வருகிறான், அவன் பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போகிறான், அவனை ஏன் அடித்துக் கொன்றீர்கள் கேட்டு கதறியுள்ளார்.

அவன் திருட மாட்டான் என கூறும் மல்லி, அவனைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவனைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவனது உறவினர்கள் அவனது உடலை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.