சென்னையில் தங்கையின் கணவரை 15 முறை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி சேர்ந்தவர் ஜெயகோபால், செல்போன் கடை வைத்திருந்த ஜெயகோபால் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற ஆவடி பொலிசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஜெயகோபாலின் உடலில் 15க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய காயங்கள் இருந்ததால் பழிவாங்கும் நோக்கில் கொல்லப்பட்டதாக பொலிசார் சந்தேகித்தனர்.
விசாரணையில் ஜெயகோபால் மனைவியின் அண்ணன் மீது பொலிசுக்கு சந்தேகம் வலுத்தது, ஜெயகோபால் கொல்லப்பட்ட நாளில் இருந்து பவித்ராவின் குடும்பம் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்து பவித்ரா அண்ணனின் செல்போனும் எடுக்கப்பட்டதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பொலிஸ் தரப்பு கூறுகையில், ஜெயகோபாலுக்கும், பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் குழந்தையும் உள்ளது. கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
ஆனால் கடைசி நேரத்தில் விவாகரத்து கொடுக்க ஜெயகோபால் மறுத்துவிட்டார், இந்நிலையில் ஜெயகோபாலை தனியாக அழைத்து சென்ற பவித்ராவின் அண்ணன் மதுவாங்கி கொடுத்துள்ளார்.
விவாகரத்து பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆத்திரத்தில் ஜெயகோபாலை கொன்று விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பவித்ராவின் அண்ணன் மற்றும் அப்பாவை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.






