மனைவி, மகனை கொன்று விட்டு கணவர் தற்கொலை!!

596

கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (34), எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தார். முத்துப்பாண்டிக்கு பிரியா (26) என்ற மனைவியும், சவுமியநாராயணன் (2) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முத்துப்பாண்டி தன் பெற்றோரையும், பிரியாவின் பெற்றோரையும் கோயிலுக்கு அனுப்பிவிட்டு கடை திறக்க சென்றுள்ளார். மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு இருபக்கமும் பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், சவுமிய நாராயணன் வாயில் நுரை தள்ளியும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகிலேயே முத்துப்பாண்டி தூக்குப்போட்டு சடலமாக தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து மூன்று சடலங்களையும் கைப்பற்றினார்கள். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் முத்துப்பாண்டி இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.