பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் கணவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!!

642

இந்தியாவில் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவியின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். ராணுவ மேஜரான இவர் மனைவி குமுத் மோர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த சமயத்தில் கடந்த 15-ஆம் திகதி பணி நிமித்தமாக டி.வட்ஸ் அசாம் சென்றார். அப்போது டி.வட்ஸ் பயணித்த விமானப்படை ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சில நாட்களில் பெண் குழந்தையை பெற்றெடுத்த குமுத், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

இத்தருணத்தில் புரண்டு அழும் பெண்களுக்கு மத்தியில், கனத்த இதயத்தோடு கணவர் இறுதி ஊர்வலத்தில் குழந்தையுடன் பங்கேற்ற குமுத்தின் செயல் காண்போரின் கண்களை குளமாக்கியது.