ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட துபாய்!!

1099
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் ஞாயிறு காலை உள்ளூர் நேரப்படி 10.30 மணி அளவில் உடற்கூறு சோதனை மேற்கொள்ளப்படும், அதன் பின்னர் 90 நிமிடங்கள் நீளும் எம்பாமிங் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியானது.
மட்டுமின்றி அன்றைய தினமே மாலை 3 மணி அளவில் உடற்கூறு சோதனைக்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டு, அடுத்த 3 மணி நேரத்தில் ஸ்ரீதேவியின் உடலானது இந்தியா கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஞாயிறு முழுவதும் உடற்கூறு சோதனை முடிவடையாத நிலையில், துபாய் பொலிசார் குறித்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அதில் ஸ்ரீதேவி பிரபலமான நபர் ஆகையால் விரிவான உடற்கூறு சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அதனால் காலதாமதமாகும் எனவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை, உடற்கூறு சோதனை முடிவடைந்து அவர் உயிரிழக்க மதுபோதையில் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததே காரணம் என தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்துள்ள துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இது வழக்கமான முடிவு என்றும், இதுபோன்ற விவகாரங்களில் கடைபிட்டிக்கப்படுவது தான் எனவும் துபாய் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.