தற்கொலை செய்த இளம் தம்பதி : வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

545

இந்தியாவில் இளம் தம்பதி ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் பன்சல். இவர் மனைவி டிம்பிள். தம்பதிக்கு ஆயூஸ் எனற மகன் உள்ளான்.

இந்நிலையில் சஞ்சயின் சொத்துக்கள், பணம் மற்றும் காரை யாரோ சிலர் மிரட்டி அவரிடமிருந்து பறித்துள்ளனர் அவர்களிடமிருந்து அதை திரும்ப வாங்க முயன்றும் சஞ்சயால் முடியவில்லை, இதையடுத்து மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் அவரை டிம்பிள் காப்பாற்றியுள்ளார். பின்னர் மீண்டும் அந்த நபர்கள் தம்பதிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து சஞ்சயும், டிம்பிளும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

அதற்கு முன்னர் டிம்பிள் ஒரு வீடியோவையும், சஞ்சய் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளனர். அதில் குற்றவாளிகளிமிருந்து பணம், சொத்துக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தால் அதை எங்கள் மகன் ஆயூஸ் பெயரில் எழுதிவிடுங்கள் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சஞ்சயும், டிம்பிளும் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதன் பின்னர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றியுள்ள பொலிசார் வழக்கு தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள்.