என்னை மன்னித்து விடுங்கள் : தற்கொலைக்கு முன்னர் மாணவரின் உருக்கமான கடிதம்!!

797

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் -தங்கம்மாள் தம்பதியின் மகன் விவேகானந்தன். 13 வயதே ஆன விவேகானந்தன், வீட்டருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுவன் பயின்றுவந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அவனை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த குறித்த மாணவன் தன் மழலைத் தன்மை மாறாமல் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

மாணவனின் கடிதத்தில், என்னுடைய சாவுக்கு ஆசிரியர் பிரபாகரன்தான் காரணம் என்றும், மற்றொரு ஆசிரியரான ரவி, என்னுடைய தந்தையிடம் போனில் பேசியபோதே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். என்னால் எனது தந்தை மற்றும் தாய்க்கு எந்தவொரு அவமானமும் வரக்கூடாது. அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

மேலும், சக மாணவர்களும் விவேகானந்தனுக்கு உறுதுணையாக இல்லாமல் அவர்களும் சேர்ந்து கிண்டல் செய்ததால் தான் மாணவன் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.