திருமணமான ஆறு மாதத்தில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்!!

636

சென்னையில் திருமணமான ஆறு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரத்தை சேர்ந்த கப்பல் மாலுமி பிரேம்குமாருக்கும், காசிமேட்டை சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

தற்போது அனிதா கர்ப்பமாக இருக்கும் நிலையில் 15 நாட்களுக்கு முன்பு கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரேம்குமார் மும்பை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று அனிதாவுடன் செல்போனில் பேசிய அவர் தகாத முறையில் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனிதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பொலிசார் அனிதாவின் சடலத்தை கைப்பற்றி விட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.