35 நாடுகள் பொதுநலவாய மாநாட்டுக்கான வருகையை உறுதிப்படுத்தியுள்ளன!!

612

Commonwealthபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அரச தலைவர்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளும் கலந்து கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுணுகம தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்து கொள்வதாக இதுவரையில் 13 அரச தலைவர்கள் மட்டுமே அறிவித்துள்ளனர் என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரையில் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா சுமூக உறவை பேணுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.