வர்த்தகரை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை!!

625

courtவர்த்தகர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பை அறிவித்தார்.

2004ம் ஆண்டு ருவான்வெல்ல – கனன்தொட்ட பிரதேச வர்த்தகர் ஒருவரிடம் பணம் கொள்ளையிட்டு அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சந்தேகநபர்கள் நால்வரில் இருவர் பொலிஸ் அறிக்கையின்படி குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை மற்றும் மெதிரிகிரிய பகுதிகளைச் சேர்ந்த 42, 47 வயதுடைய நபர்களுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.