பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் தொலைக்காட்சியில் செய்தியை தொகுத்து வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் செனட் அவை சமீபத்தில், திருநங்கைகள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மற்றும் பாலின அடையாளத்தை முடிவு செய்து கொள்ளும் அதிகாரத்தை வழங்கும் மசோதா ஒன்றை சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை திருநங்கை ஒருவர் முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்.
மாவியா மாலிக் எனப் பெயரிடப்பட்ட திருநங்கை பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் Kohenoor News என்கிற தனியார் தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்துள்ளார்.
இதனிடைய வரலாற்றில் முதன் முறையாக செய்தியை தொகுத்து வழங்கிய மாவியா மாலிக்கிற்கு ஏராளமானோர் சமூக வளைத்தளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.






