மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய் : நெகிழ வைக்கும் காரணம்!!

675

இந்தியாவில் மகனும், தாயும் ஒரே வகுப்பு படித்து தேர்வு எழுதிய ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பஞ்சாப்பின் Ludhiana பகுதியைச் சேர்ந்தவர் ரஜ்னி பாலா. 44 வயதான இவருக்கு ராஜ் குமார் என்ற கணவரும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த 1989 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக 9 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த ரஜ்னி பாலா, தற்போது தனது மகனுடன் சேர்ந்து அதாவது 29 வருடங்களுக்கு பின் மீண்டும் தன் படிப்பை துவங்கி தேர்வு எழுதியுள்ளார் .

இது குறித்து ரஜ்னிபாலா கூறுகையில், கடந்த 1989 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் 9 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. என்னுடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய படிப்பை தொடரும் படி கூறினார்.

மூன்று பிள்ளைகளுக்கு தாய், நான் எப்படி படிப்பை தொடர முடியும் என்று நினைத்தேன். தற்போது மருத்துவமனையில் உதவியாளராக இருக்கும் எனக்கும் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு அடிப்பைடை தகுதியாவது தேவை, அதுமட்டுமின்றி என்னுடைய மாமியார் படிக்காத காரணத்தினால் அவரும் என்னை படிக்கும் படி ஊக்குவித்தார்.

என்னுடைய கணவர் எனக்கு பெரிதும் உதவியாக உள்ளார். அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து எனக்கும், மகனுக்கு படிப்பை சொல்லித் தருவார். என் இரண்டு மகள்களும் உதவுவதால், நிச்சமயமாக 10ம் வகுப்பை தாண்டி பட்டப் படிப்பை தொடருவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவரது கணவர் கூறுகையில், நான் 17 ஆண்டுகளுக்கு பின்னர் என்னுடைய பட்டப் படிப்பை படித்து முடித்தேன். என்னால் முடிந்த போது ஏன் என் மனைவியால் முடியாது என்று நினைத்தேன், அதன் காரணமாகவே அவரை ஊக்குவித்து படிப்பதற்கு அனுப்பி வைத்தாக தெரிவித்துள்ளார்.