பெற்ற மகனை அடித்து கொலை செய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

1126

இந்தியாவில் குடிபோதையில் தந்தையை தாக்கிய மகனை ஆத்திரத்தில் தந்தை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பித்யாதர் (62). இவர் மகன் ஹரேந்திரா பிஹிரா.

நேற்று இரவு ஹரேந்திரா மது அருந்திவிட்டு வீட்டுக்கு போதையில் வந்த நிலையில் குடும்பத்தினருடன் சண்டை போட்டுள்ளார்.

மேலும் கொம்பால் தனது தந்தை பித்யாதரை தாக்கியதில் அவர் தலையில் அடிப்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த பித்யாதர் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து ஹரேந்திராவை வேகமாக தாக்க சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் ஹிரேந்திரா சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பித்யாதரை கைது செய்துள்ளனர்.