ரயிலில் மோதி 16 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!

701

trainஅங்குலானை சமகி மாவத்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் மருதானையில் இருந்து பாணதுறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மொரட்டுவ பகுதி பாடசாலையொன்றில் தரம் 10ல் கல்வி கற்கும் 16 வயதான மாணவராவார்.

மாணவனின் சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோனைகள் இன்று இடம்பெறவுள்ளன.