பிரித்தானியாவில் இலங்கையர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது!!

589

slபிரித்தானியாவில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீட்சா விநியோகம் செய்த தவிச பீரிஸ் என்பவரே கடந்த வாரம் கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்சா விநியோகத்திற்காக சென்றிருந்த போது தென் யோர்க்ஷயர் பிரதேசத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

தென் யோர்க்ஷயர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரும், 25 வயதான நபர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.