கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை!!

508

katuகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டக்காலி நாய்களினால் தொல்லை ஏற்பட்டுள்ளது. கட்டாக்காலி நாய்களின் சஞ்சரிப்பினால் இதுவரையில் இரண்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிவேக நெடுஞ்சாலையின் நிர்வாக உயரதிகாரி பீ.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் வலைகளின் மூலம் பிடிக்கப்பட்டிருந்தன. இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் சென்ற நபர் காரிலிருந்து இறங்கி பாதையில் நடந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.