போப் ஆண்டவரின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்கா ஒட்டுக் கேட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ உலக தலைவர்களின் தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வத்திகானில் உள்ள போப் ஆண்டவரின் தொலைபேசி பேச்சும் ஓட்டுக் கேட்கப்பட்டதாக இத்தாலி நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
மேலும் இது தொடர்பாக விவாதிக்கப்படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவலை அமெரிக்க உளவு நிறுவனம் மறுத்துள்ளது.
இந்நிலையில் வத்திகானின் செய்தித் தொடர்பாளர் வானே வினீஸ், அச்செய்தியில் உண்மை இல்லை, வத்திகன் புனிதமான இடம், ஆகவே அங்கு ஒட்டுக் கேட்பு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஐ.நாவின் தகவல் தொடர்புகளையும் ஒட்டுக் கேட்கவில்லை என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.




