ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதி படங்களுடன் யாழில் ஒருவரின் செயல்!!

641

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களுடன் வலி.வடக்கில் ஒருவர் காவடி எடுத்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 27 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் ஒரு பகுதியான 683 ஏக்கர் நிலரப்பரப்பு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து ,ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியை சேரந்த ஒருவர் காவடி எடுத்துள்ளார். இவர் தமது தமது உடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களை உடலில் கட்டிக்கொண்டு காவடி எடுத்துள்ளார்.