இலங்கையில் புத்தாண்டினை வரவேற்ற சந்தர்ப்பத்தில் கல்கிஸ்ஸை இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவு நிறுவனத்தின் மின்சார லிப்ட்டில் சிக்கி விபத்துக்குள்ளான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டபொல – இழுக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு நிறுவனத்தின் மின்சார லிப்ட்டில் சிக்கி விபத்துக்குள்ளான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்






