ஆறு கோடி ரூபா பணம் கொள்ளையிட்ட கும்பல் கைது!!

589

imagesபாரியளவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜாஎல பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் மகளின் திருமணத்திற்காக எடுத்துச் சென்ற 75 லட்ச ரூபா பணத்தை ஆயுத முனையில் குறித்த கும்பலே கொள்ளையிட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மகளின் திருமணத்தை நினைத்த மாதிரி நடத்த முடியாத காரணத்தினால் கவலையடைந்த குறித்த ஆடைக் கைத்தொழிற்சாலை உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார்.

கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் ஆறு கோடி ரூபா பணத்தை இந்தக் கும்பல் கொள்ளையிட்டுள்ளது.

புறக்கோட்டையில் வர்த்தகர் ஒருவரிடம் 350 லட்ச ரூபா கொள்ளை, கொட்டாஞ்சேனையில் நபர் ஒருவரிடம் பத்து லட்ச ரூபா கொள்ளை, புறக்கோட்டையில் நகையகம் ஒன்றில் 45 லட்ச ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்தக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

களனி, மட்டக்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும், பணமும் மீட்கப்பட்டுள்ளது.