இராணுவ வீரர்கள் கொலை வழக்கில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

574

jailவில்பத்து சரணாலயத்திற்குள் வைத்து இராணுவ வீரர்கள் சிலரை கொலை செய்த குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007 மார்ச் மாதம் 09ம் திகதி வில்பத்து சரணாலயத்திற்குள் ஜீப் ஒன்றில் பயணித்த இராணுவ வீரர்கள் நால்வர் கொலை செய்யப்பட்டனர்.

இக்கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது பயங்கரவாத தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது