இங்கிலாந்தில் உள்ள மன்செஸ்டர் விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் பாதுகாப்பு பகுதியில் திடீரென தங்கள் மேலாடையை கழட்டி அரைநிர்வாணமாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து மன்செஸ்டர் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் தங்கள் உடமைகளை பரிசோதனை செய்யும் இடத்திற்கு வந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் கோட் மற்று பெல்ட்டை கழட்டுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு அவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் கோட் மற்றும் பெல்ட்டை கழட்டினால் மட்டுமே அவர்கள் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதால் கடுப்பான அந்த இரண்டு பெண்கள் உடனடியாக கோட், பெல்ட், மற்றும் ஆடைகள் அனைத்தையும் கழட்டி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு அதிகாரிகள் உடனே கோட்டை கொடுத்து அணிய சொல்லி வற்புறுத்தினர். பின்னர் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் அவர்களை உடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மன்செஸ்டர் விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




