நைஜீரிய நாட்டில் குழந்தை உற்பத்தி தொழிற்சாலை நடத்திய பெண் அதிரடி கைது!!

697

nigeriaசில பொருட்களை ரகசியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நபர்களைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நைஜீரியா நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டிற்கு ரகசியமாக அந்த குழந்தைகளை விற்பனை செய்துவந்த ஒரு ரகசிய கும்பல் நேற்று நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 கர்ப்பிணி பெண்களை பொலிசார் மீட்டார்கள்.

இதுபற்றி பொலிஸ் அதிகாரி கூறுகையில்.. இது ரகசியமாக இயங்கிய குழந்தை உற்பத்தி தொழிற்கூடம் என வர்ணித்தார். பிடிபட்ட பெண்கள் பொலிசில் கொடுத்த வாக்குமூலத்தில் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக எங்களை இங்கே அடைத்து வைத்திருந்தார்கள்.

குழந்தை பிறந்ததும் அதை நல்ல விலைக்கு விற்று விடுவார்கள் என்று முறையிட்டார்கள். இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்து பொலிசார் மேலும் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் நைஜீரியாவை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது