பாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவி : கணவனின் மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!

1101

 

இந்தியாவில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கணவன் பாம்பாட்டியின் பேச்சை கேட்டதால் பரிதாபமாக உயிர் போயுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bulandshahr பகுதியைச் சேர்ந்தவர் Devendri. 35 வயது பெண்ணான இவர் வீட்டு வேலைக்காக வீட்டின் அருகில் இருந்த மரக்கட்டைகளை வெட்டியுள்ளார்.

அப்போது திடீரென்று இவரை பாம்பு கடித்துவிட்டதால், உடனடியாக அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். கணவரோ அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பாம்பாட்டியை அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த பாம்பாட்டி, அவரிடம் மாட்டின் சாணத்தை வைத்து உடல் முழுவதும் மூடினால் பாம்பின் விஷம் அனைத்தும் வெளியில் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாட்டுச் சாணத்தை வைத்து உடல் முழுவதையும் மூடியுள்ளார். அருகில் பாம்பாட்டி ஏதோ மந்திரம் ஒன்று கூறி வந்துள்ளார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து பார்த்த போது Devendri பரிதாபமாக இறந்துள்ளார். பாம்பு கடித்தவுடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார், ஆனால் கணவனின் மூட நம்பிக்கையால் அவரின் உயிர் தான் பரிதாபமாக போயுள்ளது.