அழகு சிகிச்சை நிலையங்களில் தரமற்ற கிறீம்கள் : எச்சரிக்கை!!

670

Facial-Bleaching-Creamநாட்டின் பல பிரதேசங்களிலுள்ள அழகு சிகிச்சை நிலையங்களைச் சூழ நடத்தப்பட்ட சோதனைகளில் பாவனைக்கு தகுதியற்ற ஒருதொகை கிறீம் வகைகள் நுகர்வோர் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு, கண்டி, குருநாகல், கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 107 அழகு சிகிச்சை நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அழகு சிகிச்சை நிலையங்களில் பயன்படுத்தப்படும் காலாவதியான தரமற்ற மற்றும் அனுமதியற்ற அழகு சாதனங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி 67 அழகு சிகிச்சை நிலையங்களில் இவ்வாறான தகுதியற்ற அழகு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு இவ்வாறான அழகு சிகிச்சை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.