காதுக்குள் கரப்பான்பூச்சிகளுடன் 9 நாட்கள் வாழ்ந்த இளம்பெண்!!

292

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் காதுக்குள் கரப்பான்பூச்சியுடன் 9 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தின் மெல்போர்ன் நகரில் குடியிருந்துவரும் Katie Holley சம்பவத்தன்று குளிர்ச்சியான ஏதோ ஒன்று காதுக்குள் நுழைந்தது போன்று இருந்ததால் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துள்ளார்.

பின்னர் குளியலறைக்கு விரைந்த அவர் காதை சுத்தம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இருப்பினும் காதுக்குள் ஏதோ ஒன்று நகர்வது போன்று அவர் உணர்ந்துள்ளார்.

காட்டன் பயன்படுத்தி காதை மறுபடியும் சுத்தம் செய்த அவருக்கு, காதினுள் இருந்து கரப்பான்பூச்சியின் கால்களில் ஒன்று வெளியே வந்துள்ளது.

இதனையடுத்து கணவரின் உதவியுடன் மீண்டும் காதுக்குள் காட்டனை செலுத்தி சுத்தம் செய்துள்ளனர். ஆனால் Katie Holley-ன் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி மிகவும் ஆழமாக உள்ளே சென்றுள்ளது.

இதனையடுத்து சில மைல்கள் தொலைவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கணவனும் மனைவியும் விரைந்துள்ளனர்.

அங்கே நர்ஸ் ஒருவர் Katie Holley-ன் காதுக்குள் திராவகம் ஒன்றை சில துளிகள் விட்டுள்ளார். சில நிமிடங்களில் கரப்பான்பூச்சியின் நகர்வு நிலைத்துள்ளது. பின்னர் மருத்துவர் உயரிய கருவியை பயன்படுத்தி அந்த கரப்பான்பூச்சியை வெளியே எடுத்துள்ளார்.

சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தமது காதுக்குள் சிக்கிய கரப்பான்பூச்சியை அகற்றிய பின்னரே நிம்மதி அடைந்ததாக Katie Holley தெரிவித்துள்ளார்.

சம்பவம நடந்து 9 தினங்கள் கடந்த நிலையில் மீண்டும் அவரது காதுக்குள் ஏதோ ஒன்று நகர்வதாக கேட்டி ஹோலிக்கு உணர்வு ஏற்பட்டுள்ளது.

அவரால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஒரு கட்டத்தில், காதில் அழுக்கு சேர்ந்துள்ளதால் தமக்கு அவ்வாறான உணர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கருதியுள்ளார்.

இதனிடையே பொதுவாக தாம் முன்பதிவு செய்து சந்திக்கும் மருத்துவரிடம் சென்றபோது தமது காதுக்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வு தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவர் கேட்டி ஹோலியின் காதை பரிசோதித்து, காதுக்குள் இருந்து மீண்டும் ஒரு கரப்பான்பூச்சியின் கால் பாகத்தை வெளியே எடுத்துள்ளார்.

மட்டுமின்றி ஒரு முழு கரப்பான்பூச்சியின் உடல் பாகங்களை 6 துண்டாக வெளியே எடுத்துள்ளார் குறித்த மருத்துவர்.

இதனையடுத்து குறித்த மருத்துவரின் ஆலோசனைப்படி காது தொண்டைக்கான சிறப்பு மருத்துவரை சென்று கண்டுள்ளார் கேட்டி ஹோலி.

குறித்த மருத்துவர் விரிவான சோதனைக்கு பின்னர் கேட்டி ஹோலியின் காதுக்குள் இருந்து ஒரு முழு கரப்பான்பூச்சியை மீண்டும் வெளியே எடுத்துள்ளார்.

மட்டுமின்றி காதுக்குள்ளேயே இருந்து இறந்த கரப்பான்பூச்சிகளின் உடல் பாகங்களையும் அவர் வெளியே எடுத்துள்ளார். பின்னர் காதை சுத்தப்படுத்தி கேட்டி ஹோலியை நம்பிக்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.