வடக்கில் உதவு நிறுவனம் அமைப்பதற்காக இயன் பொத்தமின் நடைப்பயணத்தில் கவாஸ்கர், கங்குலி இணைவு!!

781

Gangulyவடக்கில் உதவு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பொத்தம், நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த நடைபயணத்தில் நேற்று இந்தியாவின் முன்னாள் அணி தலைவர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சவ்ரவ் கங்குலி ஆகியோர் பங்கேற்றனர்.

நேற்றைய நடை பயணம் கண்டியில் இருந்து பின்னவெல யானைகள் சரணாலயம் வரை 40 கிலோமீற்றரை கொண்டதாக அமைந்திருந்தது. சுமார் 40 செல்சியஸ் வெப்பத்தில் இந்த நடை பயணம் இடம்பெற்றது.

நடைப்பயணத்த்தின் பின்னர் கருத்துரைத்த சவ்ரவ் கங்குலி தாம் 25 கிலோ மீற்றர் வரை நடந்ததை நம்பமுடியாமல் உள்ளதாக குறிப்பிட்டார். எனினும் இதனை தொடர்ந்தும் செய்து வருகின்ற இயன் பொத்தமின் சேவை பாராட்டுக்குரியது என்றும் கங்குலி குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இன்று நடை பயணம் கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து பிரேமதாஸ மைதானம் வரை இடம்பெறவுள்ளது.