கட்டுப்பாடின்றி அப்பல்லோவில் அதிக இனிப்புகளை சாப்பிட்ட ஜெயலலிதா : திடுக்கிடும் தகவல்!!

322

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் -ஆம் திகதி காலமானார். அதற்கு முந்தைய 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சமயத்தில் லட்டு, குலோப்ஜாமுன், ரசகுல்லா ஆகியவற்றை ஜெயலலிதா அதிக அளவில் உட்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஆணையத்தில் சிலர் கூறியுள்ளனர்.

குறிப்பாக, நவம்பர் 22ஆம் திகதி அவர் அதிகளவு இனிப்புகள் சாப்பிட்டதாகவும், டிசம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் அப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கை அவர் பருகியதாகவும் தெரிகிறது.

மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வகைகளை கொடுத்ததா, அல்லது மருத்துவர்களின் அறிவுரையை மீறி ஜெயலலிதா இனிப்பு வகைகளை கேட்டு சாப்பிட்டாரா?

யார் அவருக்கு இனிப்பு வகைகளை வரவழைத்து கொடுத்தது? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது