சாய்பாபா சிலையில் இருந்து விபூதி கொட்டுவதாக பரபரப்பு!!

800

babaஇந்தியாவின் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் அமீனாபுரத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவருடைய மகன் வீரேஷ். இவர் ஷிரடி சாய்பாபா பக்தர்.

வீரேஷ் ஷிரடி சாய்பாபா கோவிலுக்கு தொடர்ந்து 7 வாரங்களாக சென்று வந்தார். 8வது வாரம் சென்று விட்டு வந்தபோது அங்கிருந்து சாயாபாபா சிலையை வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து தரிசனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு வழக்கம் போல பூஜை அறைக்கு சென்றபோது ஷிரடி சாய்பாபா சிலையின் பாதத்தில் விபூதி கொட்டிக் கிடந்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து விபூதி கொட்டியதாகவும் அவர் கூறினார்.

இந்த தகவல் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் பரவியது. ஏராளமானவர்கள் சரணப்பாவின் வீட்டுக்கு வந்து பார்த்தனர். ஆனால் ஷிரடி சாய்பாபா சிலையின் பாதத்தில் கிடந்த விபூதியை மற்றவர்கள் தொட்டுப் பார்க்க சரணப்பாவும், வீரேசும் மறுத்து விட்டனர்.



இதுபற்றி அவர்கள் கூறுகையில் அதை நாங்களே இன்னும் எடுத்து பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.