பாடசாலை மாணவனுக்கு எமனாக மாறிய தென்னை மரம்!!

765

கம்பஹா அத்தனகல்ல – அலவல பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். அலவல மகாவித்தியாலத்தில் 9 வகுப்பில் பயிலும் துலான் செனிது என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த மாணவன், பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட பகுதி நேர வகுப்பில் கலந்து கொண்ட தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து வர பாடசாலை அருகில் சென்று காத்திருந்த போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று சரிந்து மாணவன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.