இளைஞரை கத்தியால் குத்திய இலங்கையின் பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர்!!

573

இலங்கையின் பிரபல தொலைகாட்சி அறிவிப்பாளர் ஒருவர் நபர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் அறிவிப்பாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் தாக்கினார் என அறிவிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.