கொழும்பு மாநாட்டில் மனித உரிமைமீறல்களே முக்கிய அம்சம்: நியூஸிலாந்து பிரதமர்..!

506

newஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வில், மனித உரிமைமீறல் விடயமாக முதன்மை விடயமாக அமைந்திருக்கும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

கீ பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டுக்காக நாளை வியாழக்கிழமை புறப்படவுள்ளார்.

இந்தநிலையில் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று நாட்டின் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளமையை நிராகரித்துள்ள கீ, நியூசிலாந்தின் கருத்துக்களை இலங்கை ஜனாதிபதிக்கு நேரடியாக தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இதனை இலங்கை கடுமையாக பின்பற்றவேண்டும் என்று நியூஸிலாந்து எதிர்ப்பார்ப்பதாகவும் கீ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் நல்லிணக்க நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கிறது என்பது தொடர்பாக தாம் இலங்கை ஜனாதிபதியிடம் கேட்கவுள்ளதாகவும் கீ தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தின் அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தவிசாளர் பதவி அன்றே இலங்கைக்கு வழங்கப்பட்டதாகி விட்டது என்றும் கீ சுட்டிக்காட்டியுள்ளார்.