முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிப்பு: பழ. நெடுமாறன் உட்பட பலர் கைது..!

1047

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் பழ. நெடுமாறன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதை கண்டித்து பழ. நெடுமாறன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதாகக் கூறி, இன்று  காலை இடிக்கப்பட்டது.



அந்த இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

பின்னர் பொலிஸார் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிட்டனர். இதனிடையே, அந்தப் பலகையை ஒரு சிலர் இடித்து அகற்றி, கம்பிகளைப் போட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் நூற்றுக் கணக்கானோரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

p1