ஜேர்மன் நாட்டில் விலைமாது ஒருவர் பணம் தராத காரணத்திற்காக தனது வாடிக்கையாளரை169 முறை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனில் உள்ள டசால்டோர்ப் என்னும் பகுதியில் விலைமாது ஒருவர் தனது வாடிக்கையாளரான 71 வயது முதியவரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், இப்பெண் கோகையின் போதை பொருளுக்கு அடிமையாகி தெருக்களில் வாடிக்கையாளர்களை பிடித்து வாழ்க்கை நடத்தும் பெண் என்று தெரியவந்துள்ளது.
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன என்றும் அவர்கள் குழந்தைகள் காப்பகத்தில் வளர்கிறார்கள் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளன.
மேலும் இப்பெண்மணியின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.