கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து ரத்தம் உறைந்த சிறுவனின் கடைசி நிமிடங்கள் : இறுதியில் நடந்த திருப்பம்!!

352

எட்டடி நீள கட்டுவிரியன் பாம்பு கடித்து ரத்தம் உறைந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட சிறுவனை அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் சோளிங்கர் பகுதியை அடுத்த காளிங்காபுரத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் சரஸ்வதி தம்பதியினர். இவர்கள் மகன் சுனில் (11) . சுனில் அங்குள்ள அரசினர் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கிறான்.

கடந்த 25ஆம் தேதி இரவு தனது தாய் தந்தையுடன் வீட்டிற்கு வெளியே படுத்து கொண்டிருந்த சுனிலை ஏதோ ஒன்று கடித்துள்ளது. வலியால் அலற தொடங்கினான் சுனில். தாயும் தகப்பனும் பார்க்கையில் அருகில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

அதனை அடித்து சாக்கு பையில் போட்ட விஜயகுமார், அதற்குள் வலியால் துடித்த மகனை தூக்கி கொண்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது இருப்பினும் சுனிலின் ரத்தம் உறைய தொடங்கியதால் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அதிகாலை 3.30மணிக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சுனிலுக்கு அங்குள்ள அரசு மருத்துவர் தேரணிராஜன் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டது.

2 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்கள் போராடி மரணத்தின் விளிம்பில் இருந்த சுனிலை உயிருடன் மீட்டனர். நேற்று சுயநினைவுக்கு வந்த சுனில் தனது பெற்றோருடன் பேசினான். பெற்றோர் கண்ணீர் மல்க மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதுபற்றி மருத்துவர் தேரணிராஜன் கூறுகையில் அரசு மருத்துவமனை மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

எட்டடி நீள கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் சுனில் இங்கு வரும்போதே ரத்தம் உறைந்து நரம்புகள் செயலிழந்து போய் வந்தான். நாங்கள் அவனை போராடித்தான் காப்பாற்றினோம் என்றது குறிப்பிடத்தக்கது.