எனக்கு சரியான ஜோடி நயன்தாரா தான் – ஆர்யா..!

290

aryaநவம்பர் 22ல் இரண்டாம் உலகம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வராகவன், அனுஷ்கா, ஆர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

´´என் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த ´இரண்டாம் உலகம்´ .

இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், செல்வராகவனுக்கும் என் நன்றி ´´ என்று பேச ஆரம்பித்தார் ஆர்யா.

´´நான் நடித்த நான் கடவுள், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வருஷக்கணக்கில் எடுப்பதாகவும், அதுபோன்ற படங்களில் நீங்கள் ஏன் நடிக்கணும் என பலரும் என்னிடம் கேட்கின்றனர்.

பாலா, செல்வராகவன் போன்றோர் வருஷக்கணக்கில் படம் எடுக்கின்றனர் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை.

ஒவ்வொரு காட்சியும் சரியாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகம் உழைக்கின்றனர், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் .

எனக்குப் பிடித்த நடிகை நயன்தாரா தான், எனக்கேற்ற சரியான ஜோடியும் அவர் தான்´´ என்றார். இத்தனைக்கும் அனுஷ்கா மேடையிலேயே இருந்தார்.