இங்கிலாந்தில் Norfolk எனும் இடத்தில கடற்கரையோரம் குழந்தைகள் விளையாடும் பவுன்சிங் கூடாரம் ஒன்று திடீரென வெடித்தது. அதே சமயத்தில் சிறு குழந்தை ஒன்று 20 மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டாள்.
இந்த விபத்தை நேரில் பார்த்த பல பொதுமக்கள் பயத்தில் உறைந்து நின்றனர். உடனடியாக காவல்துறைக்கும் அம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் விபத்தில் பாதிக்கப்பட்ட 4 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அந்த குழந்தை இறந்து விட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது என் வாழ்வில் இதுவரை இப்படி ஒரு பயங்கர சம்பவத்தை பார்த்ததில்லை என்கிறார்.
குழந்தைகள் விளையாடும் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்ற கோட்டை ஒன்றில் அந்த குழந்தை வெயில் கொளுத்தும் நேரத்தில் விளையாடி இருக்கிறது. அதிக வெயிலால் அந்த கோட்டை வெடித்து அதில் இருந்தகுழந்தை தூக்கியெறியப்பட்டு விட்டாள். தயவு செய்து குழந்தைகளை வெயில் நேரங்களில் இது போன்ற இடங்களுக்கு விளையாட அனுப்பாதீர்கள் . குழந்தையின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள் என்று அவர் கூறினார். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.







