தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கம் அழைத்துள்ள போதிலும் கட்சி இது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்புகள் கிடைத்துள்ளதெனவும், இருப்பினும் தான் போவது பற்றி எதையும் முடிவாக கூற முடியாதெனவும் 15 ம் திகதி இது தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
பொதுநலவாய தலைவர்கள் மாநாடு நடைபெறும் போது அதற்குப் புறம்பாக சில நாடுகளின் தலைவர்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திக்கவுள்ளார்.
பெரும்பாலும் இதன் பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.