சாதனை நாயகன் சச்சினுக்கு இன்று இறுதி, 200வது டெஸ்ட்!

272

sachineஇந்திய அணியின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார்.

இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார்.

இது இவரது 200வது டெஸ்ட் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சச்சினுக்கு மிகச் சிறப்பான முறையில் விடைகொடுக்க, மும்பையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சச்சின் ஏரளமான பதாகைகள் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பை கிரிக்கெட் சங்கமும் (எம்.சி.ஏ.,), சச்சினை கௌரவிக்க, பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதல் கட்டமாக கண்டிவலி மைதானத்துக்கு இவரது பெயரை சூட்டியது. இவரது 200வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.