எரிமலை சீற்றம் : 6000 பேர் வெளியேற்றம்..!

459

eriஇந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா தீவில் 8,120 அடி உயரம் உடைய எரிமலை ஒன்று கடந்த சில மாதங்களாக குமுறிக் கொண்டிருந்தது.

சினபாங் என்ற அந்த எரிமலை தற்போது சீற்றம் அடையத் தொடங்கியது.

இதனால் எரிமலையில் இருந்து வெப்ப குழம்புகளும், கரும்புகையும் வெளியேறிவருகிறது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி சுதோர்போ கூறுகையில், எரிமலை சீற்றம் அடைந்துள்ளதால் கரோ மாவட்டத்தில் உள்ள சினபாங் அடிவாரத்தில் இருக்கும் ஏராளமான கிராமங்களில் வசிக்கும் சுமார் 6000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளோம்.



மேலும் சுற்றி உள்ள இடங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எரிமலையைச் சுற்றி சுமார் 3 கிமீ சுற்றளவுக்கு ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.