முதல் 20/20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி..!

275

saபாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய தினம் டுபாயில் இடம் பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பாக். அணி சார்பில் உமர் அக்மால் மாத்திரமே 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

99 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.3 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்நது. தெ.ஆ அணி சார்பில் கொக் 48 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஆட்ட நாயகனாக டேல் ஸ்டைன் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியோடு 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.