சனல் 4 ஊடகவியலாளர்கள் நேர்மையான நோக்கில் இலங்கை வரவில்லை: தேசிய சுதந்திர முன்னணி..!

681

channel4ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வரவழைத்து கன்னத்தில் அறைந்து கொண்டது போன்று சனல் 4 ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை தரம் தாழ்த்தப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் அரசாங்கம் மிகப் பெரிய தவறை செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திரைப்படத்தை தயாரித்த ஜொனத்தன் மில்லர் நேர்மையான நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

நாடு சர்வதேசத்திற்கு முன்னால் பிரதான இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அதனை இருளை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.