வீரம் படத்தில் அஜித் யார்?

290

ajithவெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, பெயர் அண்ணா இதுதான் வீரம் படத்தில் அ‌‌ஜித்தின் உத்தேச கதாபாத்திரம்.

கிராமத்து கதையில் நடித்து ரொம்ப நாளாகிறது என்று அ‌‌ஜித் ஆசையோடு ஒப்புக் கொண்ட படம் வீரம். படத்தில் இவருக்கு ஏகப்பட்ட தம்பிகள்.

சமீபத்திய அ‌‌ஜித் படங்களில் பார்க்கக் கிடைக்காத சென்டிமெண்ட் காட்சிகள் வீரத்தில் உண்டு. படத்தில் அ‌‌ஜித்தின் தம்பிகள் மட்டுமின்றி அனைவருமே அவரை அண்ணா என்று அழைப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

நான் அண்ணா, விஜய் எம்‌ஜிஆர் என்று எஸ்ஏசி சொல்லிதான் அதிகார மையத்திடம் மாட்டிக் கொண்டார்கள். இந்த அண்ணாவை எப்படி ட்‌‌ரீட் பண்ணப் போகிறார்களோ?

வீரத்தின் இன்னொரு சுவாரஸியம் சலிக்கிற அளவுக்கு கோட் போட்டு நடித்தவர் முழுக்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வருகிறாராம்.

மங்காத்தா, பில்லா மாதி‌ரி கெட்டவர்கூட இல்லை ரொம்ப நல்லவர். மொத்தத்தில் வீரம் தலைகீழாக இருக்கும் போலிருக்கிறது.