விஜய் – விக்ராந்த் உறவில் விரிசல்?

294

vijayஎத்தனையோ நாட்கள் காத்திருந்த வெற்றி பாண்டிய நாடு வடிவத்தில் வாசல் தேடி வந்திருக்கிறது. நட்சத்திர விடுதியில் அந்த வெற்றியை அறிவிக்கவில்லை என்றால் எப்படி. லட்சுமி மேனன், சுசீந்திரன், விக்ராந்த் என்று சுற்றம் சூழ வந்தார் விஷால். கூடவே பாரதிராஜா.

படம் இயக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். செல்லமே படத்தில் நடித்ததால் நடிப்பே நிரந்தரமானது என்றார் விஷால்.

பாரதிராஜா அப்படியே உல்டா. நடிக்கணும்னுதான் 1964 ல் சென்னை வந்தேன் ஆனால் இயக்குனராகிவிட்டேன் என்றார்.

பாண்டிய நாடு படத்தில் நடித்த லட்சுமி மேனன்தான் விஷாலின் நான் சிகப்பு மனிதனிலும் நாயகி. இரண்டு பேருக்கும் சிண்டு முடிய எவ்வளவோ முயன்றும் நடக்கவில்லை.

இப்படியெல்லாம் நடக்கும் என்று முன் தயா‌ரிப்போடுதான் வந்திருப்பார்கள். எல்லாம் சுமூகமாகப் போக, விஷால் விக்ராந்தைப் பற்றி நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார்.

விக்ராந்துக்கு ஒரு நல்ல படம் அமையலையேன்னு எனக்கு வருத்தமா இருந்தது. இந்தக் கதையை சுசீந்திரன் சொன்னதும் விக்ராந்த் பொருத்தமாக இருப்பான்னு நான்தான் சொன்னேன். இதே சுசீந்திரன் இயக்கத்தில் நானும் விக்ராந்தும் விரைவில் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார்.

புரட்சி தளபதி உங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். இளைய தளபதி உங்க அண்ணன், அவரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று நிருபர் கேட்க, இளைய தளபதிய பற்றியெல்லாம் எனக்கு தெரியாது… நச்சென்று பதில் வந்தது விக்ராந்திடமிருந்து.

அண்ணன் தம்பிக்குள்ள அப்படியென்ன மனஸ்தாபமோ.