யாழ். பொது நூலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: வீதி மறிப்பு..!

545

யாழ்ப்பாணம் பொது நூலக வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று மாலை யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு அவர் தமிழித் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் டேவிட் கமரூனின் கனவத்தை ஈர்க்கும் வகையில் யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.



எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை நூலக வாளகத்திற்கு நுழையவிடாது யாழ். பொலிஸார் வீதி மறிப்புச் செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, யாழ். சென்றுள்ள செனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaffna