35 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் வெளியாகும் சங்கராபரணம்..!

299

sangaraதெலுங்கில் 1979–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சங்கராபரணம்’. தமிழிலும் தெலுங்கிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. தமிழ்நாட்டில் தெலுங்கு படமொன்று வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளியதை இந்திய திரையுலகமே வியந்து பார்த்தது.

பரத நாட்டியத்தையும் இசையையும் ஒருங்கிணைத்து காவிய படமாக இப்படத்தை எடுத்து இருந்தனர். சோமையாராஜீலு, மஞ்சுபார் கவி, ராஜ லட்சுமி துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்துக்கு பல தேசிய விருதுகளும் கிடைத்தன.

தமிழகம், ஆந்திரா மட்டுமான்றி மற்ற மாநிலங்களிலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. கே.விஸ்வநாத் இயக்கி இருந்தார். கே.வி மகாதேவன் இசையமைத்து இருந்தார். ஓம்கார நாதனு சந்தானம் சங்கராநாத சரீராபரா துரகுன இதுவேந்தி போன்ற இனிமையான பாடல்கள் இதில் உள்ளன.

35 வருடத்துக்கு பிறகு இப்படத்தை சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டலில் புதுப்பித்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு ஆர்.எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதுகிறார். பாடல்களை தமிழமுதன், தாயப்பன் எழுதுகின்றனர்.